எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு “பரத்தையருள் ராணி”

ஒரு சூனியக்காரியின் தொழில் ரகசியங்கள் முன்னுரையாடல் (யவனிகா ஸ்ரீராம், செல்மா ப்ரியதர்ஷன், லீனா மணிமேகலை) உங்களது பிரதியின் மேல் லீனா மணிமேகலை என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்த விவாதங்களும், அவதூறுகளும் சேர்த்தே வாசிக்கப்படுகிறது. பிரதிக்கு வெளியே வேறெதுவும் தனியாக இல்லையா? அப்படி வாசிக்கப்படுவது பெண் எழுதும் பிரதியை ஒரு பெண்ணாகவே பார்த்து ஏவும் வன்முறை

பரத்தையருள் ராணி

  நன்றி  http://www.vallinam.com.my/issue21/poem2.html   நஞ்சாய் காய்ந்திருந்த நிலா நாளொன்று   தீண்டலற்ற கொதிப்பில்  உடலின் குறுக்கு சால் ஓடையொன்று உடைந்து  கைகளில் குருதியின் சகதி  ஏன் என்று கேட்டான் அவன் ஏறிட்டு  பார்த்த என் கண்களை  ஏற்கெனவே தெரியும் என்றான்  உறைய மறுத்த குருதியோடு போராடியபின்  உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான் சாரையை சுரக்க

லும்பினி: புதிய இணையதளம்

அ.மார்க்ஸ், ராஜன் குறை, ரமேஷ் பிரேதன், ஹெச்.ஜி.ரசூல், பொதிகைச் சித்தர், கவுதம் நவ்லக்கா, சேனன், லீனா மணிமேகலை, கொற்றவை, ரணஜித் குஹா, யவனிகா சிறீராம், கு. உமாதேவி, த.அகிலன், இளங்கோ கிருஷ்ணன், தர்மினி, கவின் மலர், அசாதி, ஸ்நேகிதன், இசை, ஷோபாசக்தி ஆகியோரின் எழுத்துகளுடன் புதிய இணையதளம்… http://www.lumpini.in/ http://www.lumpini.in/punaivu.html லீனா மணிமேகலையின் புதிய கவிதைகள்

இரண்டு கவிதைகள்

1 நான் லீனா நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில் ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில் வாழ்கிறேன் என் வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது நாடு கோருபவ்ர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள் புரட்சி வேண்டுபவ்ர்கள் போர் தொடுப்பவர்கள் ராஜாங்கம் கேட்பவர்கள் வணிகம் பரப்புபவர்கள் காவி உடுப்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் நோய்

சிறந்த மாணாக்கன்

  ராணுவத் தளவாடங்களுக்குப் போக எஞ்சிய பணத்தில் இளைத்திருந்த அவ்வகுப்பறை கூலி ஆசிரியர்கள் அவர்கள் இன்றும் என் மகனின் தலையில் தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் காவியின் மீது பச்சையின் மீது வெள்ளையின் மீது உறுதியேற்கச் சொல்கிறார்கள் கேள்வியை சுட்டும் விரலை கூர்மையான நாக்கை தொங்கும் வாலை எதையும் சக்கரத்தின் ஆரங்களுக்கு நேர்படுத்துகிறார்கள் தாய்நாட்டின் பொருட்டு படையெடுப்பு

காதலற்ற முத்தங்களும் லெனினும்

ஒரு கோப்பைத் தண்ணீர் கோட்பாட்டை லெனின் சொன்னார் என்றாய் ஏன் ஆண்டனி அதை எப்படி குடிப்பது என்பது பற்றி கேட்டாயா துளி துளியாகவா ஒரே மூச்சிலா மிடறு தாகத்திற்கா இள்ஞ்சூட்டிலா குளிரூட்டியா பன்னாட்டு கம்பெனியின் சுத்திகரிக்கப்பட்ட ஒரு போத்தல் நீர் எவ்வளவு ரூபிள்கள் என்று அவருக்கு சொல்வாயா ஆண்டனி அமெரிக்க தண்ணீரா தேசிய தண்ணீரா தடை

என்னிடம் அந்தக் கவிதையில்லை

  எப்போதும் முடிவுக்கு வராத ஒன்று பயங்கரவாதத்திற்கு எதிரானது மொழி பயிற்றுவிக்கப்பட்ட குண்டுகளின் திரிகளில் எல்லைகள் எல்லைகளுக்குள் வேறு எல்லைகள் தடுத்துநிறுத்தும் வார்த்தை எதுவும் இந்தக் கவிதையில் இல்லை வேறு வார்த்தைகள் அதிபர்களிடமிருக்கிறது வாசகர்கள் விற்பனை செய்யப்ப்ட்டுவிட்டார்கள் பதுங்கு குழியில் அர்த்தங்கள் தொலைக்காட்சி, தோட்டாக்களின் ஒரு வார்த்தையை உமிழுகிறது அப்போது மனிதர்கள் கோப்பைகளில் நிறைகிறார்கள் கோகோ