அறியப்படாத புதிரை வண்ணார் சமூகத்தின் கதை – புதர்ப்பறவை

நன்றி – குங்குமம் -நா.கதிர்வேலன்   -நா.கதிர்வேலன் ‘‘ஊரின் பெரும்பகுதியைக் கடலில் சுழற்றிப் புயல் எறிய, எஞ்சியிருக்கும் சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் தாங்கி நின்றது தனுஷ்கோடி. அங்கே காற்றில் கூட இன்னும் உதிர நாற்றம் அடிக்கிறது. மணல் துகள்கள் அளவுக்கு அங்கே கதைகள் மண்டிக் கிடக்கின்றன. அதில் ஒரு கதையைச் சொன்னதுதான் ‘செங்கடல்’. இப்போ

இவங்க குரல் ஓங்கி ஒலிக்கனும்

“சின்ன வயசுல இருந்து நாம்  நிறைய தேவதைக் கதைகள் கேட்டு வளர்ந்திருக்கோம். Unseeableனு சொல்லப்படுற, பார்த்தாலே தீட்டுன்னு சொல்லி ஒதுக்கி வெச்ச சமூகத்து தேவதைகளைப் பற்றிய கதை இது. தலித் சமூகத்திற்குள்ளேயே ஒடுக்கப்படுகிற ஒரு பிரிவினர்கள்தான் புதிரை வண்ணார்கள். அந்த பிரிவினர்ல இருந்து ஒரு பதின்ம வயது சிறுமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். பிறப்பின் அடையாளங்களுக்கு

அடுத்து என்ன?

நன்றி விகடன் தடம் படைப்பியக்கம் எனபது படைப்பதைவிட காத்திருத்தல் தான் என்று ஆழமாக நம்புகிறேன். படைப்பின் உன்னத தருணங்களை அந்தக் காத்திருப்பே பெற்றுத் தருகிறது. கதாபாத்திரங்களின் இசைவுக்காக, அவர்கள் பகிரும் வாழ்க்கையின் அதி அந்தரங்கத்  துண்டுகளுக்காக, கண்களில் நிறையும் நம்பிக்கைக்காக, ஈரம் கூடிய கைப்பற்றுதலுக்காக, ஒளிக்கீற்றுகளின் சாய்வுக்காக, இதயத்தின் அடுக்குகளில் இருந்து கிளம்பும் குரலுக்காக நான் காத்திருக்கிறேன்.கால

கமலா தாஸ் வாழ்க்கை திரைப்படமாகிறது – ஜன்னல் நேர்காணல்

 பிரபல மலையாளக்கவிஞர் கமலாதாஸின் கதையை,படமாக எடுக்கும் எண்ணம் தோன்றக் காரணம் என்ன?   கமலா தாஸ் என்னை மிகவும் பாதித்த கவிஞர். என் ஆதர்சம். அவருடைய Summer in Calcutta என் கைப்பையில் எப்போதும் வைத்திருப்பேன். “என் கதை” என்ற அவரது சுயசரிதை நூல் சந்திக்காத சர்ச்சைகளே இல்லை. எழுபதுகளில் அவர் எழுத துணிந்த விசயங்கள் இன்று எழுதிக் கொண்டிருக்கும் பெண்கள் கூட எழுத தயங்குபவை.

காடெல்லாம் நெருப்பு கடலெல்லாம் காவல்

செங்கடல் திரைப்பட விமரசனம் – ஆதவன் தீட்சண்யா  நன்றி: செம்மலர், ஜனவரி 2012 அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசவேண்டும். ஆமாம் எப்படியாவது பேசித்தான் ஆகவேண்டும். ஆனால்அது ஒன்றும் எளிதல்ல. எனவே தான் அப்படியான இக்கட்டான நேரங்களில் பலரும் பம்மிப் பதுங்கி பல்லிளித்து நாவொடுங்கி நமத்துப்போய் விடுகிறார்கள். ஆனால் எளிய மக்கள் மீதுள்ள அக்கறைகளினால் மட்டுமே உந்தப்பட்டு களமிறங்குகிறவர்கள் உண்மையைத் துணிந்து பேசிவிடுகிறார்கள்-அதன் விளைவுகளை அறிந்திருந்தும். கூட.செங்கடல் படத்தை முன்முடிவுகளற்று பார்க்கிற எவரொருவரும் இவ்வாறே விளங்கிக்கொள்வாரென நினைக்கிறேன். தான் பேசவந்தப் பொருளோடு தொடர்புபட்டுள்ள இந்திய மற்றும் இலங்கை அரசுகள், இவ்விரு நாடுகளின் கடற்படை மற்றும் காவல்துறை, வாய்ச். சவடால் கட்சிகள்,தொண்டு நிறுவனங்கள், மதம் என்று சகல அதிகார மையங்களையும் அம்பலப்படுத்திவிடுகிற  இப்படத்திற்கு  உடனடியாக. தணிக்கைச்சான்று வழங்கப்படாதது இயல்பே.  நெடும் போராட்டத்தினூடே  ஒரு வெட்டுகூட இல்லாமல்  தணிக்கைச்சான்று பெற்றுவிட்ட போதிலும். வெகுஜனத் திரையிடலுக்கு

திரைப்பட விழாக்களிலும் தணிக்கையை நுழைக்காதே!

முற்று முழுவதுமாக திரைப்பட ஊடகம் வணிகமயமாக்கப்பட்டிருக்கும் சூழலில் வணிகம் சாராத மாற்றுச் சினிமாக்களும் வணிக நிறுவனங்கள் சாராத சுயாதீனமான (Independant) திரைப்படக் கலைஞர்களுக்கும் களம் அமைத்துத் தரும் வெளியாகவும் இத்தகைய மாற்றுச் சினிமாக்களை சினிமா பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்லும் பாலமாகவும் திரைப்பட விழாக்களே இருக்கின்றன. திரையரங்குகளும் வெளியீட்டாளர்களும் கிட்டாத திரைக்கலைஞர்கள் உலகம் முழுவதும் இவ்வாறான திரைப்பட

ஒரு தொடக்கம் அல்லது சில திறந்த முடிவுகள்

  திரைப்படக்கலையை ஒரு சமூகப் பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, “முடியும்” என்று தீர்மானமாக சொல்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது டிஜிட்டல் தொழில் நுட்பம். மிக மலிவாக கிடைக்கும் ஒலி,  ஒளிப் பதிவுக் கருவிகள், கை கணினிகளுக்கு வந்துவிட்ட படத்தொகுப்பு மென்பொருட்கள், டி.வி.டி விநியோக முறை என்று வணிக முதலாளி களிடமிருந்து  சினிமாவை

செங்கடல்

(விகடனின் கேள்விகளுக்குத் தொகுப்பாக  எழுதி தந்தது) செங்கடல், சாட்சியாகவும், கதைசொல்லியாகவும் நான் நிற்கும் இடம். தனுஷ்கோடி என்பது ஒரு அசுரத்தனமான மணல் காடு. அங்கு ஓயாமல் சுழன்றடிக்கும் காற்றில் தங்கிவிட்ட ஓலமும் , முகத்திலப்பும் மணல் துகள்களின் கதைகளும் தான் என்னை செங்கடலுக்கு இழுத்து சென்றது.   செங்கடலின் கதைநாயகன் பட்டாளம் என்ற முனுசாமியுடன்    

ஒரு பெட்டை நாயின் கூச்சல்

 http://www.lumpini.in/a_punaivu-005.html மகாஸ்வேதா தேவியின் “திரெளபதி” என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன் திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலும் உறைந்துப் போன ரத்தம். “இவ துணியெல்லாம் எங்க? “என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு “உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா” என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில் வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க