முன்னாள் காதலன் – கவிதை

நன்றி – ஆனந்த விகடன் எப்படிப் போகிறது உன் காதல் வாழ்வு என்ற என் கேள்விக்கு மையமாக முறுவலித்தான் என் முன்னாள் காதலன் உனக்கு? என்று திருப்பிக் கேட்ட அவனுக்கு “நிறைவு”  என்று அவன் கண்கள் துணுக்குறுவதைப் பார்க்கும் வரை சொல்லிவிட்டு இனி எஞ்சிய வாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன் . இரண்டு கோப்பை பியர் உள்ளே

திருநங்கையை அல்லது திருநம்பியை காதலிப்பது எப்படி 

  நன்றி – விகடன் தடம் கவிதை – கபே மோசஸ் (Gabe Moses) மொழிபெயர்ப்பு – லீனா மணிமேகலை குறி, யோனி முலை, மார்பு போன்ற சொற்களை கேட்ட  மாத்திரத்தில் விரியும் உங்கள் மனப் பிம்பங்களை மறந்துவிட துணிய வேண்டும் மேலும் அச்சொற்களை மெல்லத் திறந்து ஒரு மருத்துவச்சி போல அவற்றின் மார்புக்கூடுகளை அழுத்தி புதுரத்தம் பாய்ச்சுவதோடு அவற்றின் எலும்புகளின் மஜ்ஜையில்

போர் வந்த நாள் – கவிதை

நன்றி – ஆனந்த விகடன் கவிதை : நிகோலா டேவிஸ்(Nicola Davies) மொழிபெயர்ப்பு: லீனா மணிமேகலை   போர் வந்த அந்த நாளில்  சன்னல் நிலைகளில் பூக்கள் மலர்ந்திருந்தன என் அப்பா  என் இளைய சகோதரனை  தாலாட்டுப் பாடி  தூங்கவைத்துக் கொண்டிருந்தார் என் அம்மா  காலை உணவை சமைத்துவிட்டு மூக்கில் செல்லமாக உரசி முத்தமிட்டு பள்ளி

டெகீலா

நன்றி – விகடன் தடம் ஓவியம் – மணிவண்ணன் ஒவ்வொரு மதுபானக்கடையிலும் யாரோ ஒருவன் தன குவளையில் மிச்சமிருக்கும் மதுவை வெறித்தபடி அமர்ந்திருக்கிறான் அந்த மதுவில் எல்லாமும் மிதக்கிறது சொல்லப்படாத காமம், காதலின் துரோகம் ஈரம் காயாத கலவி, பிரிவில்லாத பிரிவு, கைவிடமுடியாத வாக்குறுதிகள் என எல்லாவற்றிலும் ஏறி நின்றுக்கொண்டு பரிகசிக்கும் ஏக்கங்கள் நாற்காலி சரிவது போல தோன்றி அவன்

கவிதை நூல் விமர்சனக் கூட்டம் – கோவை

சிச்சிலி – கவிதை தொகுப்பு வெளியீடு

புகைப்பட வீடியோ –  புகைப்படக்கலைஞர் பிரபு ராமகிருஷ்ணன் தொடுப்பு – https://www.youtube.com/watch?v=j7xYJxZmCX0&app=desktop   அழைப்பிதழ்    

அவள் காதலிக்கிறாள் – கவிதைகள்

நன்றி – ஆனந்த விகடன் அவள் காதலிக்கிறாள் 1. எட்டிவிடும் தூரம் தான் மேசையின் மறுபக்கம் அமர்ந்திருந்தாய் சுவரெல்லாம் சன்னல்கள் கொண்ட அறை அது மஞ்சள் திரைச்சீலைகளில் கசிந்த மாலை சூரியன் உன்னை ஒளியால் வரைந்த கோட்டோவியமாக்கியது நீ அணிந்திருந்த நீல நிற சட்டையின் நூலாக என் இதயம் நெசவுத்தறியில் சுற்றிக் கொண்டிருந்தது உன் உதடு

காதல் – கவிதை

நன்றி – குமுதம் காதல் உனது கைப்பிடியின் அந்த சிறுகுகையில் என்னை ஒளித்துவைத்துக்கொள் நீ அற்ற நாட்களின் அனாவசிய வெளிச்சம் என் கண்களை கூசச்செய்கிறது உன் சுவாசத்தின் வழி காற்றையும் உன் முத்தத்தின் வழி நீரையும் சுகித்து வாழ்ந்துகொள்கிறேன் உன் அருகாமை இல்லாத உலகம் ஒரு ராட்சச மிருகமாக மருட்சி கொள்ள வைக்கிறது இந்த நிமிடத்தில்

செய்வாயா – கவிதை

நன்றி -குமுதம் செய்வாயா? நாம் மிகச் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் காலக் கடிகாரத்தின் உடைந்த முள்ளொன்று உயிருடன் படுத்துக் கிடந்தது அதனிடம் விசாரித்தேன் நாம் பிரிந்திருந்தோமா என்று நாம் இப்போது இணைந்துவிட்டோமா என்று அது திரும்பக் கேட்டது சற்று பொறு, முள்ளின் மறுபாதியை தேடி எடுத்து வருகிறேன் என்றேன் அது உன்னிடமே இருக்கிறது என்றது