செய்வாயா – கவிதை

நன்றி -குமுதம் செய்வாயா? நாம் மிகச் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் காலக் கடிகாரத்தின் உடைந்த முள்ளொன்று உயிருடன் படுத்துக் கிடந்தது அதனிடம் விசாரித்தேன் நாம் பிரிந்திருந்தோமா என்று நாம் இப்போது இணைந்துவிட்டோமா என்று அது திரும்பக் கேட்டது சற்று பொறு, முள்ளின் மறுபாதியை தேடி எடுத்து வருகிறேன் என்றேன் அது உன்னிடமே இருக்கிறது என்றது