செய்வாயா – கவிதை

நன்றி -குமுதம் செய்வாயா? நாம் மிகச் சமீபத்தில் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் காலக் கடிகாரத்தின் உடைந்த முள்ளொன்று உயிருடன் படுத்துக் கிடந்தது அதனிடம் விசாரித்தேன் நாம் பிரிந்திருந்தோமா என்று நாம் இப்போது இணைந்துவிட்டோமா என்று அது திரும்பக் கேட்டது சற்று பொறு, முள்ளின் மறுபாதியை தேடி எடுத்து வருகிறேன் என்றேன் அது உன்னிடமே இருக்கிறது என்றது

ரத்த நினைவுகள்

நன்றி – சிலேட் இலக்கிய இதழ் என் முதல் மாதவிடாய் எனக்கு நன்றாக  நினைவிருக்கின்றது. சாரண சாரணியர் சேவைக்காக எனக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்ட நாள். நாள் முழுதும் கொளுத்தும் வெயிலில் அணிவகுப்பு செய்துவிட்டு, நீலக் கலர் சாரணியர் சீருடையில் ரத்தக்கறையோடு வீடு திரும்பினேன். அம்மா ஊரில் இல்லை. வீட்டில் இருந்த அப்பாவிடம் ” என் ஜட்டி