அச்சம் தவிர். ஆண்மை இகழ்

  நன்றி – அந்திமழை மாத இதழ் சென்ற வாரம் டெல்லியில், இருபத்து மூன்று வயது பெண் மாணவி மீது, ஓடும் பேருந்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பெயரிட தமிழில் ஒரு சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தமிழில் எழுதும் சிந்திக்கும் பெண்ணுயிரான எனக்கு இது ஒரு அவமானகரமான தருணம். என் முன்னே குவிந்திருக்கும் தினசரி செய்திகளிலும், கட்டுரைகளிலும்