தமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை

எந்த ஒரு திரைப்படமும் மெய்யான சுதந்திரத்துடன் அடையாளப்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. முதலீட்டை ஆதாரமாகக் கொண்ட திரைக்கலையைக் கையிலெடுக்கும் கலைஞர் நிதியாதாரம் என்ற முதல்படியேலேயே தன் சுதந்திரத்தை பேரம் பேசக்கூடியவராக. மாறிவிடுகிறார். சுயாதீனம் என்பதை சரியான அர்த்தத்தில் முழுமைப்படுத்த வேண்டிய பார்வையாளனும் செயலற்ற ஒரு நுகர்வாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான் ஆக, தணிக்கை,தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை திரைப்படக்கலையைச் சந்தைவயப்படுத்தியிருக்கும் பண்பாட்டுச்சூழல்,தொழில்