வரிகளுக்கிடையே….

http://innapira.blogspot.com/2010/04/x.html http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html http://jamalantamil.blogspot.com/2010/04/x.html மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி. கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என்

துயரத்தின் அரசியல்

மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை உன்னதம் ஏப்ரல் 2010 பாலினக் கோட்பாட்டாளராகத் திகழ்ந்து இன்று அகிம்சாவழி சிந்தனையாளராக அறியப்படும் ஜூடித் பட்லர் அழிக்கப்படக்கூடியவர்களாக ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை மாற்றிவிடும் நம் தேர்வுகளைப் பற்றியும், வன்முறையற்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இருக்கும் வன்முறையையும், புதிய திசைவெளிகளில் நம்மை இட்டுசெல்லும் சாத்தியங்கள் கூடிய துயரத்தின் அரசியலையும் குவர்னிகா(Guernica) என்ற அமெரிக்காவின்

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 பத்திரிகைச் செய்தி இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக்

தோலுரிந்த கவிதை

மேல் தோலுரிந்த கவிதையொன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால் மூடியிருக்கிறது அதன் உடல் நண்பர்களும் அல்லாதோரும் அந்தரங்கத்தில் பயம் கொள்கிறார்கள் ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள் மேல் தோலுரிந்த அபாயம் எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத் தெரிகிறது. ஆனால் அப்படியில்லையென மறுத்துக் கொள்கிறார்கள். அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம் தற்காலிகமாக அபாயத்தை ஒத்திவைத்துவிட்டோம்

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் ‘உலகின் அழகிய முதல் பெண்’ கவிதைத் தொகுப்பையும், அவரின்

இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு 28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 பத்திரிகைச் செய்தி இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம் எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர்

சிட்டுக்குருவி

குறிப்பு –  புத்தகம் பேசுது – முதல் பிரேவசம் பகுதிக்காக எழுதப்பட்டது என் முதல் பிரேவசம் என்பது என் பதினோரு வயதில், கோகுலம் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையில் வெளிவந்த “சிட்டுக்குருவி” பற்றிய கவிதை தான். என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் இரா.இரகுபதி அப்போதெல்லாம் குமுதம், விகடன் கூட வாசிக்க விட மாட்டார். தாமரை, செம்மலர், கோகுலம், பூந்தளிர்,

மனிதனின் மொழி

(தணிக்கை செய்யப்படாத பிரதி) கவிதை ஒன்றும் அழகுக் குறிப்புக் கிடையாது. வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளிப்பதைக் காட்டிலும் வாசகர்களின் கண்களில் அவர்களது சக மனிதனின் மனுஷியின் துயரத்தையும் ஆற்றாமையையும் இழிவையும் இரத்தத்தையும் எழுதிக்காட்டவே நான் விரும்புவேன். அங்கீகரிக்கப்பட்ட சொற்களால் மட்டுமே எழுதுவதற்குக் கவிதை அரசு அலுவலகக் குறிப்பல்ல. கவிதைக்கு புனிதச் சொற்கள் என்றோ விலக்கப்பட்ட சொற்கள்