பிரசுரத்திலிருந்து நிறுத்தப்பட்ட குமுதம் நேர்காணல்

4.12.2009 அன்று நிருபர் தேனி கண்ணன் அவர்களும், குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனும் எடுத்த நேர்காணல் செங்கடல் என்ற திரைப்படத்தை உருவாக்கி கொண்டிருக்கிறேன். இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிக்கிறார். இயக்குநர் ஜெரால்டும், எழுத்தாளர் ஷோபா சக்தியும் திரைக்கதை வசனமெழுதுகிறார்கள். நான் நடித்து இயக்குகிறேன். பரிசோதனை முயற்சி தான். முடியட்டும். விரிவாகப் பேசுவோம். உங்கள் சமீபத்திய “உலகின் அழகிய

சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை

நவம்பர் 16 தேதியிட்ட “சூரிய கதிர்” இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று. 377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை

மூன்று புதிய கவிதைகள்

1 என் முலைகளைப் பிரித்து வைத்தவளைத் தேடி கொண்டிருக்கிறேன் நீ தானா அவள் உன் இரண்டு கைகளுக்கும் வேலை வேண்டுமென்றா செய்தாய் இல்லை வாய் கொள்ளவில்லையென்றா இரு குன்றுகளுக்கிடையே தூளி கட்டி விளையாடுவது உன் சிறுவயது கனவு என் பிள்ளை பால் குடிப்பது கண்டு பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்? உன் பிள்ளைக்கு அறிவில்லை,அது பால்

ஆதித்தாயின் கர்ப்பக் கனவுகளால் பின்னப்பட்ட கவிதைகள் – லக்ஷ்மி சரவணக்குமார்

பெருந்திணைகளின் வழி விரியும் கனவுகளாய் ஆதியின தேவதையொருத்தியின் வேட்கை மொழியில் கட்டற்ற மழையென பீறிட்டு வெளிப்படும் சொற்களின் வழி நிறுவப்பட்ட அல்லது நம்பப்படுகிற ஒழுங்குகளின் மாயைகளை எளிதான மறுதலிப்புகளோடு எழுதிச் செல்கிறது இத்தொகுப்பின் கவிதைகள். பெருங்கனவுகள் அழீத்தொழிக்கப்படும் துயரங்களின் பால் விளைகிற அவசமாய் பெண்ணுலகின் கவிதை மொழி பேசத் தவறுபவை ஏராளம். மீறமுடியாத கட்டுப்பாடுகளென ஒன்றுமில்லை

“உலகின் அழகிய முதல் பெண்” , கவிதைப் பிரதியை முன்வைத்து

நவீனப் பெண் எழுத்தின் உச்சம் க. பஞ்சாங்கம் ஆணை நோக்கப் பெண் இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறாள் என்று காரல் மார்க்ஸ் கூறியதன் பொருள் என்ன? ஆணை விட இயற்கையின் பிடிக்குள் பெண் அதிகமாகச் சிக்கியிருக்கிறாள்; இயற்கை மனிதத்திலிருந்து சமூக மனிதத்திற்கு ஆண் மாறிக் கொள்ளுகிற அளவிற்குப் பெண் மாறிக் கொள்ள இயலாது என்பது இதன்

கவிதை/ ஒன்றுகூடல்/ உரையாடல்

தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் வால்பாறை மற்றும் சென்னை/ 2009 -லீனா மணிமேகலை /செல்மா பிரியதர்ஷன் இரண்டு ஆண்டுகளில் வெளிவந்த சில கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ ஒரு மனம் திறந்த உரையாடலுக்குத் திட்டமிட்டிருந்தது. ஜூன் 13,14 ஆகிய இரு நாட்களில் வால்பாறையின் இயற்கை எழில் சார்ந்த பிண்ணனியோடு கவிதைக்கான அமர்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன. நவீன

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

நிகழ்வு 2 இடம்: AICUF அரங்கம் – சென்னை நாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும்

சிறந்த மாணாக்கன்

  ராணுவத் தளவாடங்களுக்குப் போக எஞ்சிய பணத்தில் இளைத்திருந்த அவ்வகுப்பறை கூலி ஆசிரியர்கள் அவர்கள் இன்றும் என் மகனின் தலையில் தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் காவியின் மீது பச்சையின் மீது வெள்ளையின் மீது உறுதியேற்கச் சொல்கிறார்கள் கேள்வியை சுட்டும் விரலை கூர்மையான நாக்கை தொங்கும் வாலை எதையும் சக்கரத்தின் ஆரங்களுக்கு நேர்படுத்துகிறார்கள் தாய்நாட்டின் பொருட்டு படையெடுப்பு